இந்த வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தும், வதந்திகள் நின்றபாடில்லை. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவரது உடல்நிலையில் உள்ள பிரச்சனை மற்றும் அது எப்பொழுது சரியாகும் போன்ற தகவல்கள் சமூக வலைதளமான வாட்ஸ்ஆப்பில் பரவி வருகிறது.
அதிமுக தொடர்பான வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றில் வந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதக தகவலில், முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில், குருவுக்கு திரிகோணத்தில் ராகு இருக்கிறது. குரு நமது பிராணனை குறிப்பார். ராகு அதை தடுக்கும் செயல்கள் செய்வார்.
தற்போது எனவே பிறப்பு குருவுக்கு திரிகோணத்தில், கோச்சார ராகு செல்லும் போது இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருப்பினும் கோச்சார குருவின் பார்வை பிறப்பு சுக்கிரன் மீது இருப்பதால் மருந்துகள் வேலை செய்யும். மேலும் செய்யும் பரிகாரங்கள் பலிக்கும். குரு கல்லீரல் மற்றும் சுவாசத்தை குறிப்பவர், எனவே இந்த உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.