செப். 22 நடந்தது என்ன? ஜெ. அழைத்தால் வீட்டுக்குள் செல்வேன்: பூங்குன்றன் பரபரப்பு வாக்குமூலம்!

வியாழன், 25 ஜனவரி 2018 (12:55 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 
இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழ இதுகுறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. ஜெயலலிதா மரணத்தில் குறிப்பாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது புதிராகவே உள்ளது.
 
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு 17 வருடங்கள் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பியது விசாரணை ஆணையம். இவர் போயஸ் கார்டனில் வலம் வந்த மிக முக்கியமான நபர். இவருக்கு ஜெயலலிதாவை பற்றி நன்றாக தெரியும்.
 
இந்நிலையில் விசாரணையின் போது பெரும்பாலான கேள்விக்கு பூங்குன்றன் பதில் தெரியாது எனவே கூறியுள்ளார். செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு என்ன நடந்தது என்பதே அவருக்கு தெரியாதாம்.
 
ஜெயலலிதா அழைத்தால் மட்டுமே பூங்குன்றன் வீட்டுக்குள் செல்வாராம். மற்ற நேரங்களில் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறையை விட்டு வெளியே வரவே மாட்டாராம் என கூறியுள்ளார். மேலும் தினமும் மருத்துவமனைக்கு சென்ற பூங்குன்றன் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லையாம் மற்றும் என்ன சிகிச்சை அளித்தார்கள் என்பதும் அவருக்கும் தெரியாதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்