முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர். அவருக்கு அரசு சார்பில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை அரசு விளம்பரத்தில் பயன்படுத்தியது நீதிமன்ற அவமதிப்பு என்றும், அவரது பிறந்த நாளை தமிழக அரசு கொண்டாடுவது கேளிக்கூத்து என்றும் பாமக கூறியிருந்தது. இந்நிலையில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.