ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி; ஆனால்...: ஸ்டாலின் ஆவேசம்!

திங்கள், 31 ஜூலை 2017 (15:37 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி என கூறியுள்ளார்.


 
 
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் பகுதி மக்கள் தொடர்ந்து நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. திமுகவும், அதிமுகவும் இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
 
பல்வேறு கட்சி தலைவர்களும் கதிராமங்கலம் கிராமத்துக்கு விசிட் அடித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கதிராமங்கலம் சென்று அங்கு போராடும் மக்களை சந்தித்த ஸ்டாலினிடம் அந்த பகுதி பெண்கள் கலங்கிய குடிதண்ணீரை காட்டி கண்ணிர் மல்க முறையிட்டனர்.
 
அதன் பின்னர் அந்த பகுதி மக்களிடையே உறையாற்றிய ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பாராட்டினார். அதே நேரத்தில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சாடினார்.
 
மேலும் பேசிய ஸ்டாலின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு சர்வாதிகாரி போல ஆட்சி செய்தாலும், அவர் மாநில உரிமைகள் என வரும்போது விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் அடிமையாக ஆட்சியை நடத்துகிறார். தமிழகத்தின் மிக பிரதானமான உரிமைகளை எல்லாம் மத்திய பாஜக அரசு பறிக்கும்போது எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் ஆவேசமாக.

வெப்துனியாவைப் படிக்கவும்