தனக்கு ஒரே மகன் என்ற நிலையில்கூட, இறைவனின் கட்டளையை ஏற்று, இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்தார் இறைத்தூதர் இப்ராஹிம். அவரின் அந்த தியாகத்தை நினைவு கூறும் தினமே பக்ரீத் திருநாளாகும்.
இந்த புனித நாளில், பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும், எளியவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் நிச்சயம் அமைதி நிலவும். வளம் பெருகும்.
உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும். அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்வேண்டும்.