இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தவாறே முதல்வர் ஜெயலலிதா உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் பணிகளுக்கான உத்தரவை கட்சியினருக்கு வழங்கி வருகிறார்.
அவரது பெயரில் அறிக்கைகளும் வருகின்றன. அரியலூர் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலும், நிதி உதவியும் அறிவித்தார். அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு ,தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் கவனம் காட்டும்படியும் உத்தரவிட்டு இருக்கிறாராம்.