முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில், இதில், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது ரத்த வெள்ளத்தின் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் இந்த ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்..
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலிதா மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதில் 4.12-16 ஆம் ஆண்டு தகவலின்படிம் அப்போதைய தலைமைச் செயலாளர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், மறைந்த முதல்வருகு மூச்சுத்திணறால் இருப்பதாகவும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும்,. அவருக்கு அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய முடிவு செய்தாகவும், தலைமைச் செயலாளர் வந்து பார்த்தபோது, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.