ஜெயலலிதா பிறந்தநாள்.! அதிமுக சார்பில் மரியாதை..! தலைவர்கள் வாழ்த்து..!!

Senthil Velan

சனி, 24 பிப்ரவரி 2024 (11:16 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர்   எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
எடப்பாடி பழனிச்சாமி மரியாதை: 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் செலுத்துகிறார்.
 
ஓபிஎஸ் மரியாதை:
 
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உள்ள உருவப்படத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

இதேபோல்  ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
 
தமிழிசை சௌந்தராஜன் வாழ்த்து:
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பணிந்து நின்றுதான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று... அவர் என்மீது காட்டிய தனி அன்பும்,பண்பும் என்றும் என் நினைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அண்ணாமலை வாழ்த்து:
 
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், அவர் செயல்படுத்திய நலத்திட்டங்கள், என்றும் அவரது புகழைக் கூறும் என்று தெரிவித்துள்ளார்.

சரத்குமார் வாழ்த்து:
 
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக, மகளிரின் உரிமைக்காக புரட்சிதலைவி அவர்கள் செய்த எண்ணற்ற செயல்பாடுகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
எல்.முருகன் வாழ்த்து:
 
இந்தியாவின் குறிப்பிட்ட சில பெண் சக்தி வாய்ந்த பெண்ணாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தின் நலனுக்காகவும், ஏழை எளிய மக்கள் மற்றும் கல்விக்காகவும், ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்திய, அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ALSO READ: பரந்தூர் விமான நிலையம்.! நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு..!!
 
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்