ஜெ. படம் தெளிவாக விழவில்லை : பீதியில் அதிமுகவினர்

வியாழன், 6 அக்டோபர் 2016 (18:20 IST)
உடல் நலக்குறைவு காரணமாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.


 

 
இந்நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அன அனைவரும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு, அன்னதானம், மண் சோறு சாப்பிடுதல் என  பரபரப்பாக இருக்கிறார்கள்.
 
அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் அதிமுக பிரமுகர்கள் கோவில்களில் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். அப்படி பூஜைகள் நடத்தப்படும் கோவில்களுக்கு, விருதுநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தவறாமல் ஆஜராகிறாராம்.
 
அப்படி, சிவாகாசியில் உள்ள ஒரு கோவிலில், முதல்வருக்காக பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், அங்கு ராஜேந்திர பாலாஜி சென்றுள்ளார். அவரும், அங்கிருந்த அதிமுகவினரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். 
 
ராஜேந்திர பாலாஜி தனது கையில் முதல்வரின் பிரேம் போட ஒரு பெரிய படத்தை வைத்திருந்தார். ஆனால், புகைப்படத்தில் ஜெ.வின் உருவம் தெளிவாக விழவில்லை. போட்டோகிராபர் பலமுறை எடுத்தும் உருவம் சரியாக பதிவாகவில்லை.
 
இதனால் கவலை அடைந்த அதிமுகவினர்,  அதை செண்டிமெண்டாக எடுத்துக் கொண்டு, தொடர்ந்து பூஜை செய்து வருகின்றனராம். ஆனால், அவர் போட்டோவை சரியாக பிடிக்காததே அதற்கு காரணம் எனவும் சில அதிமுவினர் முனுமுனுத்து வருகிறார்களாம்...

வெப்துனியாவைப் படிக்கவும்