ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லம் வழக்கு: இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு!

புதன், 5 ஜனவரி 2022 (08:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது என தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் அதனை அந்த முடிவை ரத்து செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது
 
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவி சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதிமுக மற்றும் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உறுப்பினர் சிவி சண்முகம் பதிவு செய்த வழக்கில் இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது செல்லாது என்பதை எதிர்த்து மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தின் சாவி தீபா மற்றும் தீபக் ஆகியோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்