சசிகலாவின் கை விரலை பிடித்துக் கொள்ளும் ஜெ. : அப்பல்லோ அப்டேட்

வெள்ளி, 14 அக்டோபர் 2016 (11:00 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க, மீண்டும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் வந்துள்ளதாக தெரிகிறது.  அவரின் வருகைக்கு பின் முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா தரப்பும் மகிழ்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மருத்துவர்களின் ஆலோசனைப்படி, முதல்வருக்காக பிரத்யோக உணவு மருத்துவமனையிலேயே தயார் ஆகிறதாம். உறக்கம் வரும் வரை சசிகலாவின் கைகளை பிடித்துக் கொள்வதாகவும், இதனால் சசிகலா அவரின் அருகிலேயே இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகிறது. 
 
முதல்வர் நன்றாக பேசுகிறார்... சிரிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியிடன் காத்திருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்