அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் ஜெயலலிதா

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:09 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூறி உள்ளார். 


 
அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள லாரி கிளிண்டனுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ. ராமு, ஹிலாரி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவை சந்தித்ததால் தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்றார். மேலும் அவர் பேசுகையில், ஹிலாரியுடன் ஜெயலலிதா சந்தித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உலகம் பார்கிறது. இந்த சந்திப்பின் போது ஜெயலலிதா கூறிய எதார்த்தமான வார்த்தையை ஏற்று தான் ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்” என்றார். இவர் கூறியது மக்களிடையே நகைச்சுவையை தூண்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்