மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான ஆறுமுகசாமி, சசிகலாவிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது அரசு. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியவர்களிடமும், ஜெயலலிதா தொடர்புடையவர்களிடமும் தனது விசாரணையை நடத்தி வருகிறது.
இதனையடுத்தும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலாவுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. சசிகலா 15 நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் மெயிலில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், ஜெ.வின் மரணம் குறித்து சசிகலாவிடம் சிறையில் வைத்தே விசாரணை செய்ய நீதிபதி ஆறுமுகசாமி திட்டமிட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. மேலும். ஜெ. முதல்வராக இருந்த போது அவரது செயலர்களாக பணிபுரிந்த, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, மருத்துவமனையில் ஜெ. இருந்த போது அவரது கை ரேகையை பதிவு செய்த மருத்துவர் பாலாஜியிடம் நேற்று நடத்திய விசாரணையில் ஆறுமுகசாமி கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.