ஜெயலலிதா உடல் தோண்டி எடுக்கப்படுமா?

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (21:48 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் விசாரணைக்கமிஷன் அமைத்து விசாரணை செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 
காலம் தாழ்ந்த அறிவிப்பு தான் என்றாலும் சரியான நடவடிக்கை என்றே ஜெயலலிதாவின் அபிமானிகள் கருத்துகூறி வருகின்றனர். விசாரணை நியாயமாக நடந்தால் கண்டிப்பாக அவரது மரணத்திற்கு காரணமானவர்களை நீதிமன்றம் முன் நிறுத்தலாம் என்பதே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.
 
இந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் நிச்சயம் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில் மர்மமான முறையில் மரணமே நடந்திருக்கும்போது, பிரேத பரிசோதனையிலும் மாறுபாடு நடந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே ஜெயலலிதாவின் உடல் தோண்டி எடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவே அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்