அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை கேட்டு 1.50 கோடி தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுகவை கைப்பற்றும் முயற்சி சசிகலாவுக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்து வருகிறது. சசிகலா அரசியலில் இருந்து விலகிக் கொள்வது நல்லது. சசிகலாவுக்கு கட்சிக்கும் சம்பந்தமில்லை. சசிகலாவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் அதிமுகவில் இடமில்லை, இது ஒரே முடிவு தான். சசிகலாவுக்காக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். குழப்பத்திற்கு இடமில்லை என கூறியுள்ளார்.