ஜெயக்குமாரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:29 IST)
திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு 15  நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது கள்ள ஓட்டு போட்டதாக  திமுக தொண்டரை அரை நிர்வாணப்படித்திய படி தனது கட்சியினரோடு அழைத்துச் சென்றார் இதுதொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் மற்றும் 40 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நள்ளிரவு ஜெயக்குமாரை போலீஸார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவரின் வழக்கறிஞர் தாக்கல் செய்ய, இன்று வாக்குப்பதிவு நாள் என்பதால், அவரால் பிரச்சனை ஏற்படக் கூடும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்