இளைஞர்களை கலைக்க போலீஸார் தீவிரம்:மெரினாவில் போர்க்களம்

திங்கள், 23 ஜனவரி 2017 (08:22 IST)
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போரடி வருகின்றனர். தமிழக அரசு அவசர சட்டம் ஏற்படுத்தியும் மாணவர்கள் அதனை ஏற்காமல் நிரந்தர சட்டமே வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


 

மாணவர்கள் கோரிக்கை நிறிவேறியது எனக்கூறிய போலீஸார் மாணவகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை மாணவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனையடுத்து மாணவர்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றிவருகின்றனர்.  இதனை அடுத்து பல இளைஞர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றி வருகின்றனர். இதனால் மெரினா முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்