50 அடி உயரத்திற்கு பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை! வாய்பிளந்த மக்கள்! – வைரல் வீடியோ!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:47 IST)
புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை ஒன்று 50 அடி உயரத்திற்கு சீறி பறந்து சென்ற காட்சி வைரலாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ஆலந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விருவிருப்பாக நடந்து வந்தது. சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த போட்டியில் 211 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்தனர்.

இந்த போட்டிகளை காண ஏராளமான மக்கள் அப்பகுதியில் குவிந்திருந்தனர். இந்த போட்டியில் வீரர்கள் கையில் சிக்காமல் வெளியேறிய மாடு ஒன்று போட்டி களத்தை விட்டு வெளியேறியது. அங்கிருந்து பொதுமக்கள் இருந்த பகுதிக்குள் அது சீறி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் யாரையும் காயப்படுத்தாமல் சென்ற அந்த காளை அங்கிருந்த மணல்திட்டு ஒன்றின் மேல் ஏறி மறுபக்கம் தாவியது. சுமார் 50 அடி உயரத்திற்கு காளை சீறி பறந்த காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அதை சிலர் படம்பிடித்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Edit by Prasanth.K

புதுக்கோட்டை ஆலத்தூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற்ற காளை வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து மாடுபுடி வீரர்களிடம்‌ பிடிபடாமல் மைதானத்தின் வெளியே வந்த போது அங்கு பொதுமக்கள் பலர் ஒரு திட்டின் மீது கூடியிருந்தனர் அவர்களை தாண்டி உயரத்தில் பாய்ந்த காளை!@PdkPullingo @Pradeeppdk pic.twitter.com/3zXADVLSwG

— Pudukkottai Page (@pudukkottai55) February 20, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்