சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதன் நினைவாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அனுமதி கோரி உள்ளோம் என்றும் விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார்.