மாட்டிறச்சி உண்பவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு ஆதரவாளராக இருக்க முடியும்: போராட்டத்தை திசை திருப்பும் எச்.ராஜா!
வெள்ளி, 20 ஜனவரி 2017 (16:32 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் பட்டாளத்தால் நிரம்பி வழிகிறது.
பல்வேறு தரப்பினரும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மாட்டிறச்சி சாப்பிடுபவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களாக இருக்க முடியும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்.ராஜா, காளைகளை கொன்று அதன் இறச்சியை உண்பவர்கள் எப்படி ஜல்லிக்கட்டு காதலர்களாக இருக்க முடியும் என எனக்கு தெரியவில்லை. அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ள மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
I don't understand how someone who kills bull and eat it could be a jallikattu lover. They are cheating the students who are genuine .
எச்.ராஜாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு போராட்டக்களத்தில் இருக்கும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எச்.ராஜா மாட்டிறச்சி பற்றி பேசி போராட்டத்தை திசை திருப்ப பார்க்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.