ஜல்லிக்கட்டு போட்டி வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல- தமிழக அரசு விளக்கம்

வியாழன், 1 டிசம்பர் 2022 (21:01 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச   நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு அவசர சட்டம் இயற்றி 2017 முதல் ஜல்லிக் கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுள்ளன.

இந்த மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.

இந்த வழக்கின் தமிழக அரசு கொடுத்துள்ள விளத்தில், ஜல்லிக்கட்டு போட்டி வெறும் பொழுதுபோகு மட்டுமல்ல, இதில், கலந்துகொள்ளும் காளைகளின் சந்தை மதிப்பு உயரும்… இது பொழுதுபோக்கில் ஒரு பகுதி என்பதால் காளைகளை யாரும் துன்புறுத்தவில்லை என்றும்,  நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படும் என்றும்,  தமிழக அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்