தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

திங்கள், 14 மே 2018 (17:58 IST)
தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
 
இதுபற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது “தென் மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.
 
அதன் காரணமாக, தென் தமிழம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.” என அவர் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
 
கடந்த 24 மணி நேரத்தில் பழனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 4 செண்டி மீட்டர் மழையும், உடுமலைப்பேட்டையில் 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்