ஐபிஎல் 2022-; லக்னோ ஜெயிண்ட் அணி த்ரில் வெற்றி

புதன், 18 மே 2022 (23:29 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 66 ஆவது லீக் போட்டி லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

டோமர் 4 ரன்களும்,  ரானா 42 ரன்களும், ஐயர் 50 ரன்களும்,, பில்லிங்ஸ் 36 ரன்களும், சிங் 40 ரன்களும், நரேன் 21 ரன்களும் அடித்ஹனர்.

இறுதியில், ஒரு பாலுக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில்,  ஆட்டம் பரபரப்பானது. ஆனால், ஒரு ரன் மட்டுமே அடித்து மொத்தம் 208 ரன்கள் எடுத்து கொல்கத்தா தோற்றது.

இந்த த்ரிலிங்கான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அணி வெற்றி பெற்றது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்