குறிப்பாக கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள கடலில் அலைகள் ஆக்ரோஷமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேபோல் கேரளாவில் ஆலப்புழாம் கண்ணூர்ம் கொல்லம்ம் கோழிக்கோடும் திருச்சூர் ஆகிய பகுதிகளிலும் லட்சத்தீவு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.