பீட்டாக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

செவ்வாய், 24 ஜனவரி 2017 (13:49 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடங்கியதில் இருந்தே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை  தடை செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தற்போது ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வெற்றியை  கொண்டாடி வருகின்றனர்.

 
இந்நிலையில், தமிழகத்தில் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  சூரியபிரகாசம் என்பவர் முறையீடு செய்துள்ளார். மேலும் அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.
 
இந்நிலையில் இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன்  மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு முறையீட்டுக்கு பதிலாக வழக்காக தொடர்ந்தால் நாளை விசாரிப்பதாகவும் நீதிபதி  மகாதேவன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்