தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக பாஜக ஆதரவு: அப்போ அனுமதி கிடையாதா?

செவ்வாய், 10 ஜனவரி 2017 (13:11 IST)
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாஜக உணர்வுபூர்வமாக ஆதரவு அளிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.


 

 
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பாஜக உணர்வுபூர்வமாக ஆதரவு அளிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதவது:-
 
பொங்கல் பண்டிகை 15 ஆண்டுகளாக சிறப்பு பண்டிகைகள் பட்டியலில்தான் உள்ளது என்றும், பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் முழு தகவலை தெரிந்த பின் ஆர்ப்பாட்டத்தை அறிவிக்க வேண்டும்.  2012 முதல் 2014ஆம் ஆண்டு வரை இதே பட்டியலில்தான் பொங்கல் இருக்கிறது, அப்போது ஸ்டாலின் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்றார்.
 
முதலில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றார். இதையடுத்து மத்திய அரசு சட்டரீதியாக ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை அளித்தார். பின்னர் தற்போது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தால், தமிழக பாஜக ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.
 
அப்படியென்றால் ஜல்லிக்கட்டு இந்த வருடமும் அனுமதி இல்லை என்பது மறைமுகமாக இப்படி கூறுகிறார் என்பது போல் கருத்து வெளிப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்