இந்த நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது: கள்ளக்காதல் என்று கூறுவதே தவறான சொல். காதல் என்பது ஒன்றுதான். அதில் நல்ல காதல், கள்ளக்காதல் என்பதெல்லாம் கிடையாது. திருமண உறவை தாண்டிய ஒரு அன்பு என்றுதான் அதற்கு பொருள்
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் நாளையே கணவன், மனைவி வேறொருவருடன் சென்றுவிடுவார்கள் என்று கற்பனை செய்வது தவறு. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் ஒரு விஷயம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மனைவி என்பவர் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டிய ஒரு அடிமை இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து இன்னும் பல விவாதங்கள் வரும், வரவேண்டியதும் நல்லதுதான்' என்று கூறினார்