இதில், சசிகலா மட்டும் 2 முறை பரோலில் வெளியே வந்து சென்றார். அதுவும் 2வது முறை அவரின் கணவர் நடராஜன் இறந்த போது 15 நாட்கள் பரோலில் வந்தவர், பரோல் முடியும் முன்பே சிறைக்கு கிளம்பி சென்றார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரரை பார்க்க 15 நாட்கள் பரோல் கேட்டு இளவரசி விண்ணப்பித்துள்ளார். இந்த பரோல் மனு அதிகாரிகளின் பரிசீலனையில் இருக்கிறது என சிறை வட்டாரம் தெரிவிக்கிறது.