மத்திய அரசின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதியை விடுவிக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

J.Durai

திங்கள், 14 அக்டோபர் 2024 (17:07 IST)
சிவகங்கையை ஆண்ட வீரப்பெண் வேலுநாச்சியார் வெள்ளையர்கள் வசம் இருந்த சிவகங்கை மண்ணை மீட்டெடுக்கும்போது வெள்ளையர்களின் ஆயுத கிடங்கை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி அழித்த வீரத்தாய் குயிலியின் 244 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சிவகங்கை சூரக்குளம் பகுதியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரத்தாய் குயிலியின் திரு உருவச்சிலைக்கு ஏராளமான அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். 
 
அதன் ஒரு பகுதியாக மத்திய தொழில் துறை இனை அமைச்சர் எல்.முருகன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முருகன்.....  
 
ரயில் விபத்து குறித்த கேள்விக்கு ரயில்வேத்துறை எண்ணற்ர பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது என்றும் புல்லட் ரயில் வரை இந்தியாவில் இயக்கப்படவுள்ளது என்றும் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் அதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது குறித்த கேள்விக்கு கிரிக்கெட் விளையாடியதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியதுடன் செய்தியாளர்கள் கேள்வியை புரிந்து கேளுங்கள் என பேசியதுடன் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவித்தது, அதனை தொடர்ந்து மாநிலத்திற்கான பங்கு நிதியை நிதியமைச்சர் அண்மையில் விடுவித்துள்ளார்.
என்றும் கல்வி குறித்து மத்திய அரசு சில கோரிக்கைகள் வைத்து வருகிறது. அதனை நிறைவேற்றியவுடன் கல்விக்கான நிதியை விடுவிக்கும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் உதயநிதி ஸ்டாலின் துனை முதல்வர் ஆவதால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பதவி என்பது தான் உண்மை என்றும் பேசினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்