இந்நிலையில் பழங்குடியினர் பாதுகப்பு சங்க தலைவர், ஈஷா யோகா மையம் 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் இல்லாமல் கட்டுமானம் செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக நீதிமன்றம் தமிழக அரசிடம் பதில் அளிக்க கோரியது. இதற்கு பதில் மனு அளித்த தமிழக அரசு ஈஷா யோகா மையம் மீது புகார் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ் “ ஈஷா யோகா மையத்திற்கு எதிரக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூடா, நான் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்கிறேன். பலர் தங்களை சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கங்களாக காட்டிக் கொள்கிறார்கள். உண்மையில், அவர்கள் சுற்றுச்சூழலுக்கு எதிராக செய்து வந்த பல நடவடிக்கைகளை நான் நிறுத்தினேன். அப்போதும் எனக்கு எதிராக ஊடகங்கள் செயல்பட்டன” என அவர் கருத்து தெரிவித்தார்.