அரசியலை விட்டு போவேன்: குஷ்பு அதிரடி அறிவிப்பு!

வியாழன், 29 ஜூன் 2017 (10:07 IST)
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு தாவ உள்ளதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அவை வதந்திகள் என அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குஷ்பு.


 
 
குஷ்பு முதலில் அரசியலுக்கு வந்த போது திமுகவில் தான் இருந்தார். திமுகவில் குஷ்புவுக்கு ஏற்பட்ட சில மனக்கசப்புகள் காரணமாக சில காலம் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். அதன் பின்னர் அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அளவுக்கு உயர்ந்தார்.
 
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாகவும், அடிக்கடி இயங்கும் நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இந்த தகவல் உண்மையல்ல என குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
 
அதில், நான் வேறு கட்சிக்கு தாவ இருப்பதாக நிறைய வதந்திகள் வந்துகொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். நான் அரசியலை விட்டு ஒதுங்குவேனே தவிர வேறு கட்சிக்கு தாவ மாட்டேன். காங்கிரஸ் தான் என்னுடைய இலக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்