தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் ஏற்க தயார் : குஷ்பு அதிரடி

திங்கள், 11 ஜூலை 2016 (18:05 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி தனக்கு கொடுக்கப்பட்டால் ஏற்கத்தயார் என்று நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டது. முடிவில் 8 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.
 
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில், அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு இன்று டெல்லி சென்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
 
“நடந்து முடிந்த தேர்தலில், டெபாசிட் கூட வாங்காத தமிழிசை சவுந்தரராஜன் இதுவரை தனது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
தமிழக காங்கிரஸ்  கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் நான் அதை ஏற்கத் தயார்” என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்