ராம மோகனராவ் பரபரப்பு பேட்டி: ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டேன்!

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (11:38 IST)
வருமான வரித்துறையினரின் சோதனையின் போது முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் 26 மணி நேரம் ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதால் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.


 
 
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். பின்னர் தலைமைச் செயலகத்திலும் நுழைந்து தலைமைச் செயலாளர் அலுவலக்த்தில் சோதனையிட்டனர்.
 
இந்த சோதனையின் போது துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ராம மோகனராவ் வீட்டில் பல ஆவணங்கள், பணம், நகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனை வைத்து அவரை கைது செய்யும் சூழல் நிலவியது இந்நிலையில் அவர் உடல் நலம் சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தன்னுடைய வீட்டில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் காட்டிய வாரண்டில் என்னுடைய பெயர் இல்லை என கூறினார். மேலும் துப்பாக்கி முனையில் ராணுவத்தினரை வைத்து வீட்டுக்காவலில் 26 மணி நேரம் வைத்தனர் என பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்