நான் யோக்கியன்: மார்தட்டும் தயாநிதி மாறன்!

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (10:06 IST)
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது. இதனையடுத்து தான் நிரபராதி என கூறியதை தற்போது நிரூபித்துள்ளதாக தயாநிதிமாறன் கூறியுள்ளார்.


 
 
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நான் நிரபராதி என்று கூறியதை இன்று நிருபித்துள்ளேன் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார் நேற்று கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
 
இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று நான் இந்த வழக்கின் முதல் நாளில் இருந்து கூறிவருகிறேன். இந்த வழக்கில் நான் நிரபராதி என்று நிருபிக்க கடந்த ஆறு வருட காலமாக போரடி வந்துள்ளேன்.
 
என்மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு, நான் என் பதவியை ராஜினாமா செய்தபோது நான் இந்த வழக்கில் என்னை நிரபராதி என்று நிருபிப்பேன் என்று கூறினேன். இதோ இன்று நான் அதை நிருபித்துள்ளேன் என்றார் தயாநிதி மாறன்.

வெப்துனியாவைப் படிக்கவும்