உடல் நலக்குறைபாடு காரணமாக, முதல்வர் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியிலிருந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அங்கு அனுமதிக்கப்பட்ட அடுத்த நாள், அதாவது 23ம் தேதியிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன்(30) என்ற மாற்றுத்திறனாளி வாலிபர், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக் கிடக்கிறார். மூன்று வேளை உணவுக்கு, அம்மா உணவகம் அவருக்கு கை கொடுக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்காக மூன்று சக்கர வாகனங்களும், மருத்துவ சான்றிதழ்களும் முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். எனவே அவர் குணமடைய வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் வீடு திரும்பும் நாளில் நானும் வீடு திரும்புவேன் என்று கூறி வருகிறார்.