நான் ஒன்னும் ரஜினியின் வழக்கறிஞர் இல்லை: தமிழருவி மணியன் தடாலடி!

புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:28 IST)
திருச்சியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன். அவர் தற்போது தான் ஒன்னும் ரஜினியின் வழக்கறிஞர் இல்லை தடாலடியாக கூறியுள்ளார்.


 
 
ரஜினியை தமிழக முதல்வராக அமர வைப்பது தான் தனது கனவு என தமிழருவி மணியன் கூறிவருகிறார். காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் ரஜினிகாந்த் தருவார் என கூறி வரும் தமிழருவி மணியன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
 
ரஜினிகாந்த் திரையுலகில் நேரமையாகத்தான் சம்பாதிக்கிறாரா என்ற விமர்சனம் ரஜினி அரசியல் குறித்து பேசும் போதே அவர் மீது வைக்கப்பட்டது சமூக வலைதளங்களில். இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து தமிழருவி மணியனிடம் பேசிய பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று கேள்வி எழுப்பியது.
 
இதற்கு பதில் அளித்த தமிழருவி மணியன், நான் ஒன்றும் ரஜினிகாந்துக்கு வழக்கறிஞர் இல்லை என்றார் தடாலடியாக. ரஜினிகாந்தின் நேர்மையை பற்றி நான் இதுவரை பேசியது கிடையாது. ஊழலற்ற தூய்மையான ஆட்சியை கொடுப்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன் என ரஜினிகாந்த் என்னிடம் கூறினார். அதைத்தான் நான் முன்னெடுக்கிறேன். ரஜினியை முழுவதும் அறிந்து வைத்திருக்க நான் ஒன்று கடவுள் இல்லை என்றார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்