கொல்கத்தாவில் நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். இது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தெரியவரவே, அவரின் அறிவுறுத்தலின் பேரில் போலீஸாரால் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே தனது அதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டு அமைதியை சீர்குழைக்க பார்க்கிறது என குற்றஞ்சாட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரின் போராட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மம்தாவிற்கு ஸ்டாலினின் ஆதரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாலர் எச்.ராஜா மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார். அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.