கொரோனா தொற்றால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.50,000: விண்ணப்பம் செய்வது எப்படி?

புதன், 8 டிசம்பர் 2021 (07:34 IST)
அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
கொரோனா தொற்றால் உயிர்ழந்தவர்களுக்கு ரூ.50,000: விண்ணப்பம் செய்வது எப்படி
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது என்பதும் தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் தினந்தோறும் 700 பேர்களுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 50 ஆயிரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ கொரோனா பெருந்தொற்றினால்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினர்‌ வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/- (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 
அதனடிப்படையில்‌, உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினர்‌ வாரிசுதாரர்கள்‌ அரசின்‌ இழப்பீட்டு உதவித்‌ தொகை பெறுவதை எளிமையாக்கும்‌ வகையில்‌ https://www.tn.gov.in என்னும்‌ தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில்‌ "வாட்ஸ்‌ நியூ whats new பகுதியில்‌ Covid-19  என்னும்‌ விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பம்‌ செய்து உதவித்‌ தொகை பெறலாம்‌ என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்