திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதல்வர் ரூ.6,100 கோடிக்கான முதலீடுகளை ஈர்க்க கையெழுத்திட்டார் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3,440 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார் என்றும் தகவல் வெளியான நிலையில், இதுவரை ஒரு ரூபாய்கூட முதலீடு வந்துசேரவில்லை என்றும் ராமதாஸ் விமர்சித்தார்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டிய ராமதாஸ், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் இன்று வலியுறுத்தினார்.