ஓவியாவிற்கு ஓட்டு போடுங்கள் : ஹோட்டல் ரசீதிலும் அக்கப்போர்..

புதன், 2 ஆகஸ்ட் 2017 (12:37 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள நடிகை ஓவியாவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கத்திலிருந்தே கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஓவியா. எதற்கும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல், எப்போதும் சிரித்த படி இருக்கும் அவரை பலருக்கும் பிடித்திருக்கிறது. 
 
முதலில், காயத்ரி மற்றும் ஜூலி உள்ளிட்ட சிலர் ஓவியாவை டார்கெட் செய்து பேசிவந்தனர்.  மேலும், ஓவியா கண்ணீர் விட்டு அழும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.  
 
எனவே, ஓவியா பேரவை, ஓவியா புரட்சிப்படை, ஓவியா ஆர்மி என உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அவரை அழ வைத்த காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு எதிராக மீம்ஸ்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர்.


 

 
அதற்கும் ஒரு படி மேலே போய், தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல், அவரின் புகைப்படத்துடன் கூடிய பாதகைகளை கையில் பிடித்துக் கொண்டு தெரு தெருவாக சென்ற ஓவியா ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
 
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் ரசீது சீட்டில், ஓவியாவிற்கு ஓட்டு போடுங்கள் என அச்சிடப்பட்டுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்