ஐ.டி.ஐ-யில் ராகிங்: மாணவரின் ஆடையை அகற்றி பிறப்புறுப்பில் செருப்பால் அடித்த கொடூரம்..

Siva

செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (14:39 IST)
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ-யில், ராகிங் என்ற பெயரில் ஒரு மாணவர் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த காணொளியில், ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் வலுக்கட்டாயமாக ஆடையை அகற்றப்பட்டு, சக மாணவர்களால் கீழே தள்ளிவிடப்பட்டு, மிக மோசமாக தாக்கப்படுகிறார். மற்ற மாணவர்கள் கைதட்டி சிரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு மாணவன் தனது செருப்பை கழட்டி அந்த மாணவரின் பிறப்புறுப்பில் தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரின் அலறல் சத்தமும் தெளிவாக கேட்கிறது.
 
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் நடந்த விடுதியின் காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்