சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் புதிய கட்டுப்பாடுகள்: மாணவர்கள் அதிர்ச்சி..!

Siva

திங்கள், 15 செப்டம்பர் 2025 (21:40 IST)
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 
மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடப்பிரிவுகளுடன் கூடுதலாக 2 பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போதுள்ள பாடப்பிரிவுகளுடன் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து தேர்வெழுத வேண்டும்.
 
முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இனி இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி மற்றும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
 
 மேலும், 2026-27 கல்வியாண்டு முதல், 9 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்