அனிதா டெல்லி செல்ல உதவியவர் இவர்தான்

ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (22:58 IST)
மருத்துவ படிப்பு கனவு நிறைவேறாததால் தன் உயிரையே போக்கி கொண்ட அனிதாவின் போராட்டம் இன்னும் நூறு ஆண்டுகள் சென்றாலும் மறக்க முடியாதது. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து 1176 மதிப்பெண்கள் வாங்கி நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றது என்பது சாதாரண விஷயமில்லை



 
 
இந்த நிலையில் ஏழைப்பெண்ணான அனிதா டெல்லிக்கு எப்படி சென்றார்? அவருக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்தது யார்? அவருக்கு பின்னணியில் இருப்பவர் யார்? என்ற கேள்விகள் ஒருசிலரிடம் இருந்து எழுந்தது.
 
இந்த நிலையில் அனிதா டெல்லிக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து கொடுத்தது முதல் வழக்கு போடுவதற்கு உதவி செய்தது வரை செய்தது பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. 
 
நீட் தேர்வு விவகாரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்துவிட்டனர் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்