திருவள்ளூரில் இடி-மின்னலுடன் கூடிய மழை: வானிலை எச்சரிக்கை

திங்கள், 17 ஜனவரி 2022 (13:12 IST)
திருவள்ளூரில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் வடக்கு கடலோர மாவட்டங்கள் புதுச்சேரியில் ஒரு சில இடங்கள் ஆகியவற்றில் மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்