காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம் கர்நாடாகாவை காப்பாற்றும் கனமழை.. நீர்வரத்து அதிகரிப்பு..!

Siva

வியாழன், 18 ஜூலை 2024 (08:24 IST)
ஒவ்வொரு ஆண்டும் காவிரி பிரச்சனை வரும்போதெல்லாம் கர்நாடக மாநிலத்தை மழை காப்பாற்றி வரும் நிலையில் இந்த ஆண்டு காவிரியில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் காவிரியில்  நீரை திறந்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மைசூர் குடகு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கபினி அணையில் மொத்த கொள்ளளவு ஆன 84 அடியில் 83 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 இதனை அடுத்து காவிரி எல்லையான ஒகேனக்கல் அருவியில் நீர்ப்பெருக்கு அதிகரித்து வருகிறது என்றும் இதனால் அதிக அளவு கபினி அணையிலிருந்து நீர் திறந்த விடப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கர்நாடகா அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு எல்லைக்கு வந்துள்ளதாகவும் நேற்று மாலை 22,000 கன அடி ஒரு வினாடிக்கு வந்த நிலையில் இன்று 32,000 கன அடி ஒரு வினாடிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாபயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்