சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளநீர்!

வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:49 IST)
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்குகிறது
 
குறிப்பாக எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் உள்ள பல இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை முதல் சென்னையில் உள்ள சாலைகளில் போக்கு வரத்து குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்