இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல், சரியான ஒருங்கிணைப்பு இன்மை ஆகியவற்றால பலரும் பாதிக்கப்பட்டதால், ஏ.ஆ.ரஹ்மான் இதற்கு வருத்தம் தெரிவித்து, நிகழ்ச்சியில் பணம் செலுத்தி, பங்கேற்க முடியாதவவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், இதுவரை 7 ஆயிரம் டிக்கெட் ஸ்கேன் செய்து, 3 ஆயிரம் பேரின் டிக்கெட்டுகள் பரிசீலித்து 1000 பேருக்கு பணம் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.