அடுத்த 48மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை ஆய்வு மையம்
வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:29 IST)
அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் மியான்மர் கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதும் இதற்கு வங்க கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியை காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வழக்கு அந்தமான் கடல் மற்றும் மியான்மர் கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் கடலோர பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.