விஷால் உருவபொம்மைக்கு பாடை கட்டிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

சனி, 11 ஜூன் 2016 (12:02 IST)
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகர் விஷாலை கண்டித்து, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அவரது உருவபொம்மையை பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
கடந்த சில தினங்களுக்கு முன்பு விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்கின்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்ததாக கூறப்பட்டது.
 
ஆனால், இதனை மறுத்து நடிகர் விஷால் தனது ட்விட்டரில் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதில், ‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்தக் கருத்தும் என்னிடம் இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர் பேசியதாக கூறப்படும் வீடியோ பதிவைப் பகிர்ந்து, ‘இதில் நான் எங்கே ஆதரிப்பதாய்ச் சொல்லியிருக்கிறேன்’ என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
 
இந்நிலை விஷாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், மாடு வளர்போர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 
மேலும், விஷாலின் உருவ பொம்மையை பாடை கட்டி கொண்டு வரப்பட்டு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. விஷால் தனது கருத்தை திரும்ப பெறாவிட்டாதல் போராட்டங்கள் தீவரமடையும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்