கல்விக் கட்டணங்களை குறைக்க தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்தறை உத்தரவு

செவ்வாய், 26 ஜூலை 2022 (16:43 IST)
தமிழகத்தில் உள்ள சுய நிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 50 % இடங்களுக்கு அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக வசூலிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில் வரும் கல்வி ஆண்டில், தனியார் கல்லூரிகளில் ஆண்டிற்கு ரூ.25 லட்சம் வசூலித்து வரும் நிலையில், ஒரு வருடத்திற்குக் கல்விக்கட்டணம் ரூ.4 ஆயிரம் உட்பட மொத்தம் ரூ.13,610 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், வரும் கல்வி ஆண்டி மற்ற இடங்களுக்கான கட்டணத்தை கல்வி கட்டண நிர்ணயகுழு    நிர்ணயம் செய்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்